கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்குமா
மதுரை: ஆஸ்திரேலிய கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நிர்வாகிகள் வேல்சங்கர், சாய் சுப்பிரமணியம், ஜெயப்பிரகாசம் கூறியதாவது: இந்தியாவில் 2018 முதல் 2023 வரை மஞ்சள் பட்டாணி இறக்குமதியை மத்திய அரசு தடை செய்தது. சங்கத்தின் தொடர் கோரிக்கையால் 2023 டிசம்பர் முதல் தற்போது வரை உக்ரைன், கனடாவிலிருந்து இறக்குமதி வரியின்றி மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. நவ. 1 முதல், 30 சதவீத இறக்குமதி வரி விதித்ததை வரவேற்கிறோம். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு இன்னும் அனுமதி தரவில்லை. தமிழக, கேரள மக்களின் விருப்ப உணவான ஆஸ்திரேலிய கஸ்பா பட்டாணியை 30 சதவீத இறக்குமதி வரியுடன் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.