உள்ளூர் செய்திகள்

மகளிர் தினவிழா

மதுரை, : மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் சர்வதேச மகளிர் தினவிழா முதல்வர் ஜார்ஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் கபிலன் வரவேற்றார். விக்ரம் மருத்துவமனை சீனியர் டாக்டர் சுனிதா மகளிர் உடல்நலம் குறித்து பேசினார். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்முனைவர் குணசுந்தரி காணொலியில் பேசுகையில், பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்றார். பேராசிரியைகள் மாலா, தேன்மலர், சுவேதா ஒருங்கிணைத்தனர். மாணவி ஜெயசங்கரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி