உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரு மனைவிகளால் தொழிலாளி தற்கொலை

இரு மனைவிகளால் தொழிலாளி தற்கொலை

திருமங்கலம்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் நிர்ராலா 31. கரடிக்கல்லில் கட்டட தொழிலாளியாக இருந்தார். இவரது மனைவி பூஜானி நிர்ராலா. சேலத்தில் கட்டட தொழிலாளியாக உள்ளார். சுரேஷிற்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பார்வதி சூரி என்ற பெண்ணிடம் அலைபேசி வாயிலாக தொடர்பு ஏற்பட்டு 2வது திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த முதல் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஏப்.5ல் முதல் மனைவியை சமரசம் செய்ய சேலத்திற்கு சுரேஷ் சென்றார். இதையறிந்து 2வது மனைவியும் செல்ல, அங்கு இரு பெண்களும் தகராறில் ஈடுபட்டனர். சமரசம் செய்ய முடியாமல் விரக்தியில் வீடு திரும்பிய சுரேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !