மேலும் செய்திகள்
டிராக்டர் மீது பைக் மோதி ஒருவர் பலி
04-Apr-2025
மதுரை: மதுரை, ஆனையூர், தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன், 75; திருச்சியில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியாக வசித்து, அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்துகிறார். இவரது வீட்டுக்கு அருகே குடியிருந்தவர் அழகுபாண்டி, 34; கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரும், நடராஜனும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம்.நேற்று, போதையிலிருந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த நடராஜன், வீட்டிற்குள் புகுந்து, அழகுபாண்டியை அரிவாளால் வெட்டினார். அந்த இடத்திலேயே அவர் பலியானார். கூடல்புதுார் போலீசில் நடராஜன் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
04-Apr-2025