மேலும் செய்திகள்
மேலப்பாளையத்தில் பரவுது மஞ்சள்காமாலை
23-Apr-2025
மேலுார்: கீழையூரில் ஊராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை பருகிய மக்கள் உடல்நலம் பாதித்துள்ளனர்.ஊராட்சி சார்பில் பலுப்பினி கண்மாயில் போர்வெல் அமைத்து மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதில் கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.சமூக ஆர்வலர் சோமசுந்தரம்: 25 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்து பச்சை நிறமாக வருகிறது. தண்ணீர் நுரையாக பொங்குவதோடு துர்நாற்றம் வீசுகிறது. இதை குடித்த குழந்தைகள், பெற்றோர்கள் வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், மூச்சு திணறல், மற்றும் தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். குடத்தின் தண்ணீரில் ஒரே நாளில் புழு உருவாகிறது. அதனால் வேறு வழியின்றி குடிநீரை விலைக்கு வாங்கிறோம். உயிர் பலி ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
23-Apr-2025