பளுதுாக்குதல் பயிற்றுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் வீரர்களுக்கும் பயிற்சி உண்டு
மதுரை: 'தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பளுதுாக்குதல் பயிற்றுநர் பயிற்சிக்கும், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்' என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்தார்.எஸ்.டி.ஏ.டி., மற்றும் ஸ்டார் அகாடமி சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 12 முதல் 21 வயதுள்ள இருபாலர் 40 பேருக்கு பளுதுாக்குதல் பயிற்சி அளிக்க உள்ளனர். மாதம் 25 நாட்கள் தொடர் பயிற்சி, சிற்றுண்டி, சீருடை, உபகரணங்கள் வழங்கப்படும். இதற்கான தேர்வு ஏப். 28 ல் காலை 7:00 மணி முதல் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.பளுதுாக்குதல் விளையாட்டில் தேசிய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை பயிற்சி சான்றிதழ் அல்லது ஓராண்டு டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சி முடித்த 50 வயதுக்குட்பட்டோர் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதச்சம்பளம் ரூ.25 ஆயிரம். மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஏப்.20க்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பயிற்றுநருக்கான உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்றார்.