உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சொட்டு நீர்ப்பாசனத்திற்கு மானியம் பெறலாம்

சொட்டு நீர்ப்பாசனத்திற்கு மானியம் பெறலாம்

மதுரை : பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறையின் மூலம் சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக மதுரை மாவட்டத்திற்கு ரூ.10.39 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 கோடி வரை எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மானியம் ஒதுக்கப்பட்டுஉள்ளது. தாட்கோ மூலம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகள், நிலம் பெற்ற பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் தானியங்கி நீர்ப் பாசனம் (ஆட்டோமேஷன்) அமைப்பதற்கு ஒரு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மானியம் பெற விரும்புவோர் ரேஷன் கார்டு நகல், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், குறு சிறு விவசாயிகளுக்கான தாசில்தாரின் சான்று ஆகியவற்றை அந்தந்த தோட்டக்கலை வட்டார உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ