வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இனிதேடி புடுச்சு ...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போலீ சார் தேடி வருகின்றனர்.மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப் பட்ட 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்தினர்.விசாரணையில், சிறுமிக்கும் குத்தாலம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஜெகநாதன், 20, என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஆரோக்கியராஜ் அளித்த புகாரின்பேரில், போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ஜெகன்நாதனை தேடி வருகின்றனர்.
இனிதேடி புடுச்சு ...