உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கோவிலில் சாமி தரிசனம் செய்த மாஜி கவுன்சிலர் தீ வைத்து எரிப்பு; மர்ம நபர்களுக்கு வலை

கோவிலில் சாமி தரிசனம் செய்த மாஜி கவுன்சிலர் தீ வைத்து எரிப்பு; மர்ம நபர்களுக்கு வலை

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரை எரித்து கொல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் தம்பா (எ) அருண்குமார்,42; பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். தற்போது ரோட்டரி சங்க தலைவராக உள்ள இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள பழமையான மாசிலாமணி நாதர் கோவிலில் நடைபெற்ற அர்த்தசாம பூஜையில் பங்கேற்ற பின், கடற்கரையில் தெற்கு பார்த்த நிலையில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி சன்னதியில் தரிசனம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, அவர் ரெக்சின் கலந்த எரிபொருளை ஊற்றிய மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். அதில், 60 சதவிகிதம் தீயில் கருகிய தம்பாவை சக பக்தர்கள் காப்பாற்றி பொறையார் அரசு மருத்தவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ள தம்பாவிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.தம்பாவை எரித்து கொல்ல முயன்றது யார், எதற்காக செய்தனர் என்பது குறித்து பொறையார் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கோவிலில் சாமி கும்பிட்டவரை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூலை 28, 2024 18:08

என்ன மிஸ்டர் இரும்புக்கை கோப்பால் இதெல்லாம்?


Matt P
ஜூலை 27, 2024 21:56

கொலை அரசியல் தமிழ் நாட்டில் சாதாரணம் ஆகிவிட்டது. அதுவும் கோயிலில் கூடவா? கோயில்கள் கொடியவர்களாகிய அவர்களின் கூடாரம் ஆகி விடும் என்று சரியா தான் சொல்லியிருக்காரு இவரை படைச்ச தக்ஷிணாமூர்த்தி


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ