மேலும் செய்திகள்
பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை
08-Sep-2024
நுாதன முறையில் மினி ஆட்டோ திருட்டு
26-Aug-2024
மயிலாடுதுறை: சீர்காழி அருகே இடப்பிரச்னையால் ஏற்பட்ட முன் விரோத தகராறில் வயலில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற சகோதரர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா மாதானம் கண்ணபிராட்டி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ரவிச்சந்திரன்,40; விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் சாராய வியாபாரிகளான பரமசிவன் மகன்களுக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக முன் விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று மதியம் செருகுடி மேல தெருவில் உள்ள தனது வயலில் டிராக்டரை கொண்டு உழவு பணியை மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பரமசிவன் மகன்கள் கார்த்திகேயன்,35, நளமகராஜா,29, கோபாலகிருஷ்ணன்,36, ஆகிய மூவரும் உழவுப் பணியை தடுத்து நிறுத்தியதுடன், தங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரவிச்சந்திரனை வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் ரவிச்சந்திரனுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, கார்த்திகேயன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
08-Sep-2024
26-Aug-2024