உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மழை பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு- வலியுறுத்தல்

மழை பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு- வலியுறுத்தல்

மயிலாடுதுறை:“மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,” என, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம், ஆச்சாள்புரம், மாதானம் உள்ளிட்ட கிராமங்களில் மழையால் பாதித்த நெற்பயிர்களை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டாவில் பெருமழை காரணமாக 8 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுதும் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வெளிப்படையாக கணக்கெடுப்பு நடத்தி பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உரிய காலத்தில் பெற்று தர அரசு பொறுப்பேற்க வேண்டும். 2018 முதல் காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. எனவே இழப்பீடு சென்றடைவதை மாநில அரசு கண்டிப்புடன் கண்காணித்திட வேண்டும்.தி.மு.க., ஆட்சியில் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு செயல்படும் நிலையில் உள்ளதை முதல்வர் உணர வேண்டும். காப்பீடு திட்டம் முழுமையாக விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் செயல்படுத்த முதல்வர் தன் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ