உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / பைபர் படகில் திடீர் தீ: 6 மீனவர்கள் உயிர் தப்பினர்

பைபர் படகில் திடீர் தீ: 6 மீனவர்கள் உயிர் தப்பினர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி48, தர்மராஜ்25, ஜீவானந்தம்25, மணியரசன்35, சித்திரைவில் 43, தரங்கம்பாடி தாலுகா வெள்ளகோவில் பார்த்திபன்34 ஆகிய 6 மீனவர்கள் நேற்று மாலை திருமுல்லைவாசல் மீன்பிடி தளத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு 20 கடல் மைல் தூரத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது என்ஜினில் திடீரென தீப்பிடித்து பெட்ரோல் டேங்க் வெடித்தது. இதில் பைபர் படகு தீப்பிடித்து எரிய தொடங்கியது. படகில் இருந்த மீனவர்கள் ஜீவானந்தம், மணியரசன், சித்திரைவேல் ஆகியோர் கால்களில் தீக்காயம் அடைந்தனர். தீக்காயம் ஏற்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட 6 பேரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர். அதனைக் கண்ட அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சக மீனவர்கள் விரைந்து வந்து கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை