டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருநகரி வேதராஜபுரத்தை சேர்ந்தவர் முகேஷ், 30; டிராக்டர் டிரைவர். இவருக்கு, மனைவி, ஐந்து வயது மகன் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் தென்னாம்பட்டினம் கிராமத்தில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான வயலில் உழவு பணி மேற்கொண்டார். ஒரு வயலில் உழுதுவிட்டு, அருகில் உள்ள மற்றொரு வயலுக்கு செல்வதற்காக, டிராக்டரில் வாய்க்காலை கடக்க முயன்றுள்ளார். அப்போது, டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முகேஷ் துாக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.