உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / டூவீலர்களை திருடிய இருவர் கைது

டூவீலர்களை திருடிய இருவர் கைது

மயிலாடுதுறை: டூவீலர்களை திருடிய இருவரை ஆனைக்காரன் சத்திரம் போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை சாமியம் பைபாஸ் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக டூவீலரில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினார். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்து இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். அவர்கள் கடலூர் வடக்குத்திட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமகுரு மகன் பார்த்திபன்.22., மேல மணக்குடி மெயின் ரோடு லட்சுமணன் மகன் ராகவன்.17. என்பது தெரியவந்தது. இருவரும் வேலைக்குச் செல்லாமல் டூவீலர்கள் திருடி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது. இருவரிடம் இருந்த 8 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.வழக்கு பதிந்த ஆனைக்காரன் சத்திரம் போலீசார் பார்த்திபன், ராகவன் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ