மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம்:நாகையில் சமீப காலமாக நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத மின் தடையால், அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.நாகையில் பகல் நேரங்களில் கடும் வெயில் காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத பல மணி நேரம் மின் தடையால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மின் தடையால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.துணை மின் நிலையங்களில் பராமரிப்பு என்ற பெயரில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், முன்பெல்லாம் மாதத்தில் குறிப்பிட்ட இரு தினங்களில் பராமரிப்பு என மின் தடை செய்யப்படுவது வழக்கம். அத்தகவலை மின் வாரியம் முன்கூட்டியே அறிவிக்கும். ். ஆனால் சமீப காலமாக எப்போது மின் தடை ஏற்படும் என தெரியாத நிலையில் சிறு தொழில்கள், ஐஸ் கட்டி உற்பத்திகள், வர்த்தகம் முடக்கப்படுகிறது என்றனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025