மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
வேளாங்கண்ணி:சர்வதேச போதைப் பொருளான ஹாசிஸ் மேற்கு வங்கத்தில் இருந்து நாகை துறைமுகம் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக, நாகை 'கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார், வேளாங்கண்ணியில் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரிடம் விசாரித்தனர்.அவர்கள் மேற்கு வங்கம், டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த சுனித் கவாஸ், 39, தில் குமார் தாபா மங்கர், 34, என்பதும், இருவரும் ராமேஸ்வரம் மற்றும் வேளாங்கண்ணி தேவாலய தரிசனத்திற்காக வந்ததாகக் கூறினர். சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வந்த காரை சோதனையிட்டனர். காரில் ரகசிய அறை தயார் செய்து, 75 கிலோ ஹாசிஸ் போதைப்பொருள் பதுக்கியிருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு, 150 கோடி ரூபாய்.தொடர் விசாரணையில், இருவரும், தேனியைச் சேர்ந்தவருக்காக கடத்தி வந்ததும், அந்த நபர் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இதில் தொடர்புடையவர்களை தேடுகின்றனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025