மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ள சி.பி.சி.எல்., தொழிற்சாலை விரிவாக்கத்துக்காக, 606 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு, நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி, 11 நாட்கள் நடந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் போலீசார் பேச்சு நடத்திய பின் முடிவுக்கு வந்தது.இந்நிலையில், மீள் குடியமர்வு நிவாரண தொகை பயனாளிகள் பட்டியலை, சி.பி.சி.எல்., நிர்வாகம் வெளியிட்டது. இதில், முட்டம் ஊராட்சியில், 310, உத்தமசோழபுரம் ஊராட்சியில், 530 குடும்பத்தினர் பெயர் விடுபட்டதாக நாகை, தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.வருவாய் துறை அலுவலர்கள் பேச்சு நடத்திய பின் பாதிக்கப்பட்டவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.கிராம மக்கள் கூறுகையில், 'வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் துறையினர் திட்டமிட்டு இரு கிராமத்தை சேர்ந்தவர்களை நீக்கியுள்ளனர். ஆளுங்கட்சியினர் தலையீட்டால் சம்பந்தம் இல்லாதவர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அரசு உரிய விசாரணை நடத்தி, பாராபட்சமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025