உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / குறி சொன்னபடி குடும்ப தலைவி துாக்கிட்டு தற்கொலை

குறி சொன்னபடி குடும்ப தலைவி துாக்கிட்டு தற்கொலை

நாகப்பட்டினம்:நாகை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் ரமேஷ், 50; வியாபாரி. இவரது மனைவி கலா, 48. இவர்களுக்கு 22 மற்றும் 14 வயதில் மகள்கள் உள்ளனர்.இவர்களது வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன் நள்ளிரவில் வந்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரர், 'வீட்டில் உயிர்பலியாகப் போகிறது' என்றாராம். அச்சமடைந்த கலா, கணவரிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என பணம் கேட்டார்.மனைவியிடம் இது பணம் பறிக்கும் வேலை என ரமேஷ் பணம் தர மறுத்தார். இதனால் மன வேதனையில் இருந்த கலா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்குப் போட்டு இறந்தார்.நாகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை