உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / நீலாயதாட்சியம்மன் கோவிலில் புதிய தேருக்கு பூமி பூஜை

நீலாயதாட்சியம்மன் கோவிலில் புதிய தேருக்கு பூமி பூஜை

நாகப்பட்டினம்,:நாகை, நீலாயதாட்சி உடனுறை காயாரோகணேஸ்வரர் கோவிலில் புதிய தேருக்கான பூமி பூஜை நடந்தது.மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றில் முதன்மை பெற்றதும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சமய குறவர்களால் பாடல் பெற்றதும், சிவராஜதானி ஷேத்திரம் என்றழைக்கப்படும் பழமையானது நாகை, நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணேஸ்வரர் கோவில்.இக்கோவிலில் சுந்தர விடங்கர் தேர் கமிட்டி, ஓலை சப்ர கமிட்டி முயற்சியில், ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில், 16 அடி உயரம், 12 அடி அகலத்தில், உபயதாரர் பங்களிப்பில், நுாதன தியாகராஜா திருத்தேர் செய்யப்பட உள்ளது.இதற்கான நிர்மான திருப்பணி முகூர்த்தம் மற்றும் பூமி பூஜை, ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமரேசன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி சீனிவாசன், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை