உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த செம்போடை ஆர்.வி., பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில் ரத்ததானம் முகாம் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்.வி., கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன் முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி மேலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். முகாமில் ரோட்டரி சங்க செயலாளர் கிரிதரன், கல்லூரி முதல்வர் செந்தில், துணை முதல்வர் ராகவன், டாகடர்கள் அக்பர் அலி, சுந்தராஜன், போலீயோ ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜுலு உட்பட பலர் கலந்து கொண்டனர். நாகை அரசு மருத்துவமனை ரத்த வங்கியினர் 40 யூனிட் ரத்தத்தை தானமாக பெற்றனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி