மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் தெருவை சேர்ந்த சக்திவேல் (28). இவருக்கு சொந்தமான படகில் இவரும் மற்றும் செல்வராஜ் (38), ராமன் (40) ஆகிய மூன்று பேரும் கடந்த 18ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 25 படகுகளும் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில், சக்திவேல் படகைத் தவிர மற்ற படகுகள் கரை திரும்பி விட்டன. கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் படகு திசை மாறி வேறு எங்கும் ஒதுங்கி விட்டதா என தெரியவில்லை. இந்த மூன்று மீனவர்கள் கரை திரும்பாததை தொடர்ந்து கீழையூர் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மீனவர் ராஜமாணிக்கம் கூறியதாவது: கடந்த 18ம் தேதி நாங்கள் வெள்ளப்பள்ளத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றோம் 19ம் தேதி மாலை வரை சக்திவேல் படகு உட்பட அனைத்து படகுகளும் காணப்பட்டது. அதன் பின் நாங்கள் திரும்பி விட்டோம். சக்திவேல் படகு என்ன ஆனது? என தெரியவில்லை என கூறினார். இது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் செய்யப்பட்டுள்ளது. கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கோஸ்டல் போலீஸாரும், கப்பல் படையினரும் ஈடுபட்டுள்ளனர். பெரிய இழுவை படகு மூலம் தேடுவதுக்கு நாகையை சேர்ந்த இரு படகில் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 10 பேர் சென்றுள்ளனர். காணாமல் போன மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடுவதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தொழில் மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து 150க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025