மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
வேதாரண்யம்: கடலில் படகு கவிழந்து தத்தளித்த மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றி உயிருடன் கரைசேர்த்தனர். வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான படகில் கலைமணி (35), ரெத்தினவேல் (55), பழனிவேல் (30) ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் 24ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.இவர்கள் மீன் பிடித்து கொண்டு நேற்று கரை திரும்பி இருக்க வேண்டும். இவர்களது படகில் துவாரம் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து படகு கவிழ்ந்தது. இதில் அந்த படகில் இருந்த மூன்று மீனவர்களும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த செல்வம் மற்றும் மகேந்திரன் படகில் சென்ற மீனவர்கள் படகு ஒன்று கடலில் மூழ்கி மீனவர்கள் உயிருக்கு போராடுவதைக் கண்டனர். உடனடியாக அவர்களை மீட்டு தங்களது படகில் ஏற்றி கொண்டனர். புஷ்பவனம் கிராமத்துக்கு நேற்று மாலை கரை சேர்ந்தனர். உயிருக்கு போராடிய மீனவர்களை கண்டு அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025