மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் நடக்கும் வளர்ச்சிப்பணிகளை விரைவாக மழைக்காலத்துக்குள் முடிக்குமாறு கலெக்டர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.வேதாரண்யம் யூனியனை சேர்த்த தென்னம்புலம் முதல் குறவப்புலம் வரை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒரு கோடியே மூன்று லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 3.18 கி.மீ., நீளத்துக்கு சாலை அமைக்கும் பணியையும், ஒரு கோடியே 46 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடப்பணிகளையும், அவுரிக்காட்டில் உள்ள போக்கு வாய்க்காலில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 11 கோடியே 45 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும் பாலப்பணிகளையும், நாகை கலெக்டர் முனுசாமி ஆய்வு செய்தார்.ஆய்வு குறித்து கலெக்டர் முனுசாமி கூறியதாவது: வேதாரண்யம் வெள்ளத்தில் அதிகளவு பாதிக்கக்கூடிய பகுதியாகும். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல், தண்ணீர் வடிவதுக்கு ஏதுவாக வடிகால்களில் அடைப்பு ஏற்படுத்தாமல், பாலப் பணிகளை செயல்படுத்த வேண்டும். ஆகஸ்ட் மாத இறுதியில் பருவமழை துவங்க வாய்ப்புள்ளதால், நடந்து வரும் ஒப்பந்த பணிகளை விரைவாக, அதேநேரத்தில் தரமாக முடிக்கவேண்டும். தரமற்ற, தாமதமாக செய்யப்படும் ஒப்பந்த பணிகள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நாமகிரி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளர் பக்கிரிசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், மூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025