மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்
20-Nov-2025
வி.ஏ.ஓ., கொலையில் 2 திருநங்கையர் கைது
10-Nov-2025
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை
09-Nov-2025
வேதாரண்யம்: வேவதாரண்யம் அருகே மீன் பிடிக்க சென்று மாயமான மூன்று மீனவர்கள் நேற்று பத்திரமாக கரை திரும்பினர்.வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த கவிதாசன் (28). ராமனாதன் (60). சிவா (27) ஆகியோர் கடந்த பத்தாம் தேதி மதியம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் மறுநாள் 11ம் தேதி காலை கரை திரும்ப வேண்டும்.ஆனால், இவர்கள் கரை திரும்பாததால் ஆறுக்காட்டுத்துறை பஞ்சாயத்தார் ஜெகநாதன் வேதாரண்யம் கடற்கரை போலீஸிலும், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.இந்நிலையில் நேற்று காலை எட்டு மணியளவில் படகுடன் மூன்று மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பினர்.இதுகுறித்து கவிதாசன் கூறியதாவது:நாங்கள் சென்ற படகின் இன்ஜின் பழுதானதால் குறித்த நேரத்தில் திரும்ப முடியவில்லை. அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் இன்ஜினை சரி செய்து கொடுத்ததால் பத்திரமாக நாங்கள் கரை திரும்பினோம். இரண்டு நாட்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சிரமப்பட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
20-Nov-2025
10-Nov-2025
09-Nov-2025