உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாய நிலத்தில் ரசாயன கழிவைகொட்டி தீ வைப்பதால் மக்கள் அவதி

விவசாய நிலத்தில் ரசாயன கழிவைகொட்டி தீ வைப்பதால் மக்கள் அவதி

விவசாய நிலத்தில் ரசாயன கழிவைகொட்டி தீ வைப்பதால் மக்கள் அவதிகுமாரபாளையம்:அருவங்காடு கிராமத்தில் விவசாய நிலத்தில் ரசாயன கழிவை கொட்டி தீ வைத்து எரிப்பதால், அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். குமாரபாளையம் - சேலம் பைபாஸ் சாலையில், அருவங்காடு என்ற பகுதி அமைந்துள்ளது. விவசாய நிலம் அதிகம் உள்ள இப்பகுதியில், சில தினங்களாக இரவு நேரத்தில் வாகனங்களில் வரும் மர்ம நபர்கள், ரசாயன கழிவுகள் கொண்ட இரும்பு பேரல்கள், குப்பை கழிவுகளை அருகில் உள்ள விவசாய நிலத்தில் போட்டு தீ வைத்து செல்கின்றனர். கொழுந்து விட்டு எரியும் தீயிலிருந்து ஒருவித நச்சுத்தன்மை காற்றில் பரவி, அருகே வசிக்கும் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை