மேலும் செய்திகள்
வாகனம் மோதி மான் இறப்பு வனத்துறையினர் விசாரணை
23-Jan-2025
நாமக்கல் : நாமக்கல் - திருச்சி சாலை, நல்லுார் தனியார் கல்லுாரி அருகே, நேற்று காலை, 7:00 மணிக்கு, அடிபட்டு இறந்த நிலையில், புள்ளிமான் கிடந்தது.இதுகுறித்து, நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் வனச்சரகர் பழனிசாமி தலைமையிலான வனத்துறையினர், இறந்து கிடந்த ஆண் புள்ளிமானை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.விசாரணையில், மோகனுார் தாலுகா, அரூர் ஏரியில் சீமைகருவேல மரங்கள் படர்ந்துள்ளன. அங்கு ஏராளமான மான்கள் சுற்றித்திரிகின்றன. அங்கிருந்து வழிதவறி சென்ற புள்ளிமான், வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
23-Jan-2025