நாமக்கல், ப.வேலுார் பகுதியில் மினி பஸ் இயக்க ஆணை வழங்கல்
நாமக்கல், ப.வேலுார் பகுதியில் மினி பஸ் இயக்க ஆணை வழங்கல்நாமக்கல்:நாமக்கல், ப.வேலுார் பகுதிகளில், ஆறு வழித்தடங்களில், மினி பஸ்கள் இயக்குவதற்கான ஆணையை, கலெக்டர் உமா வழங்கினார்.நாமக்கல் மாவட்டத்தில், மினி பஸ்களை இயக்க, 45 புதிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, புதிய வழிதடத்தில் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த, 7ல், ஐந்து பேருக்கு பஸ்கள் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, 10 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அவ்வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதற்கு புதிய அனுமதி சீட்டு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதையடுத்து, நாமக்கல் (தெற்கு), வட்டார போக்குவரத்து அலுவலகம், ப.வேலுார் பகுதி அலுவலகத்திற்கு உட்பட்ட, ஆறு வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, புதிய அனுமதி சீட்டு பெறுவதற்கு செயல்முறை ஆணைகளை, நாமக்கல் கலெக்டர் உமா நேற்று வழங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் (தெற்கு) முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.