மேலும் செய்திகள்
வணிகர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
12-Dec-2024
நகை அடகு பிடிப்போர்சங்கம் இணைப்பு விழாமோகனுார்: தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்புடன், தாலுகா நகை அடகு பிடிப்போர் சங்கம் இணைப்பு விழா, மோகனுாரில் நடந்தது. மோகனுார் தாலுகா நகை அடகு பிடிப்போர் சங்க தலைவர் மதி தலைமை வகித்தார். செயலாளர் சுப்ரமணி வரவேற்றார். கூட்டமைப்பின் மாநில தலைவர் கந்தன், பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து பேசினார்.பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மோகனுார் அனைத்து வணிகர் சங்க தலைவர் நடராஜன் வாழ்த்தி பேசினர். அனைத்து வணிகர் சங்க துணைத்தலைவர் சோமசுந்தரம், பேரமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
12-Dec-2024