உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழா

வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழா

வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழாப.வேலுார் : ப.வேலுார் அடுத்த பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழா, கடந்த ஜன., 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நாள்தோறும் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தல் விழா நடந்தது. பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் தேர்வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி, அலமேலு மங்கை, கோதை நாயகி ஆகியோருடன் சிறப்பு அலங்காரத்தில் வெங்கட்ரமண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை பல்லக்கு உற்சவம், நாளை காலை திருமஞ்சனம், வரும், 7ல் ஸ்நபன திருமஞ்சனம், 8ல் திருமஞ்சனமும், கருட உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ