உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கட்டுப்பாட்டை இழந்த கார்மொபட் மீது மோதி விபத்து

கட்டுப்பாட்டை இழந்த கார்மொபட் மீது மோதி விபத்து

கட்டுப்பாட்டை இழந்த கார்மொபட் மீது மோதி விபத்துநாமக்கல்:நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் பிரபு, 42. இவரது மனைவி வைஜெயந்தி, 39. இவர், திருச்சி சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, திருச்சி-நாமக்கல் சாலையில் பிரபு, மனைவியுடன் மொபட்டில் சென்றுகொண்டிருந்தார்.அப்போது, திருச்சியில் இருந்து தர்மபுரி நோக்கி, சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த, 'இரிட்டிகா' கார், மொபட் மீது மோதியது. இதில், பிரபு மற்றும் வைஜெயந்தி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மொபட் மீது மோதிய கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த, 'இன்னோவா' கார் மீதும் மோதியது. அதில் காரில் பயணம் செய்த டிரைவர் சுரேஷ், 47, ராஜேந்திரன், 52, இருவரும் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி