உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கே.ஜி.பி.வி., உண்டு உறைவிட பள்ளியைநிர்வகிக்க தொண்டு நிறுவனங்ளுக்கு அழைப்பு

கே.ஜி.பி.வி., உண்டு உறைவிட பள்ளியைநிர்வகிக்க தொண்டு நிறுவனங்ளுக்கு அழைப்பு

கே.ஜி.பி.வி., உண்டு உறைவிட பள்ளியைநிர்வகிக்க தொண்டு நிறுவனங்ளுக்கு அழைப்புநாமகிரிப்பேட்டை:கே.ஜி.பி.வி., உண்டு உறைவிடப்பள்ளியை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், 10- முதல், 14 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில், கொல்லிமலை ஒன்றியத்தில், 3 கே.ஜி.பி.வி., உண்டு உறைவிடப்பள்ளிகள், 2005ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில், அரியூர் கிழக்குவலவு கே.ஜி.பி.வி., உண்டு உறைவிடப்பள்ளி மையத்தை நிர்வகிக்க அனுபவம் மற்றும் பெண்கல்வியில் ஆர்வம் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக் கள் வரவேற்கப்படுகின்றன.விருப்பமுள்ளவர்கள், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலகம், நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகம், மோகனுார் சாலை, நாமக்கல் மாவட்டம் என்ற விலாசத்தில் விண்ணப்பங்களை பெற்று, கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கருத்துருக்களை ஏப்., 4க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் கூட்டுறவு மற்றும் டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், 2024--25 மற்றும் 2025--26ம் ஆண்டிற்கு புதுப்பித்திருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் அந்நிறுவனத்தின் பெயரில், 80ஜி, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்கள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்து தனி அடையாள எண் பெற்றிருத்தல் வேண்டும்.அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் கட்டாயமாக அந்நிறுவனத்தின் பெயரில் பேன்கார்டு வைத்திருத்தல் வேண்டும். பெண் கல்வி சேவையில் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசால் நீக்கம் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்ற தொண்டு நிறுவனமாக இருக்கக் கூடாது. கடந்த மூன்றாண்டுகள் வரவு செலவு தணிக்கை செய்த விபரம் கருத்துருக்களுடன் இணைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை