மேலும் செய்திகள்
குண்டுமல்லி விலை கிடுகிடு
31-Dec-2024
எருமப்பட்டியில் நெல் கொள்முதல் மையம்விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுமா?எருமப்பட்டி, : எருமப்பட்டி யூனியனில், இந்தாண்டு அதிகளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளதால், அரசு நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கொல்லிமலையில் பெய்த கன மழையால், எருமப்பட்டி யூனியனில் உள்ள துாசூர், பழையபாளையம், சிங்களகோம்பை, செல்லிபாளையம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின. இதனால், மதகுகள் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், பொட்டிரெட்டிப்பட்டி, கோம்பை, நவலடிப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 3,000 ஹெக்டேர் பரப்பளவில், ஐ.ஆர்.50, சூப்பர் பொன்னி, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட பல்வேறு ரக நெற்பயிர்களை நடவு செய்துள்ளனர். இந்த நெற்பயிர்கள் அனைத்தும், ஒரே நேரத்தில் அறுவடைக்கு வருவதால், அனைத்து வியாபாரிகளும் விலையை குறைத்துக்கொள்கின்றனர். இதனால், 3 மாதமாக உழைத்த உழைப்பிற்கு போதிய விலை கிடைப்பதில்லை என, விவசாயிகள் புலம்புகின்றனர். இதுகுறித்து, போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்த விவசாயி பழனி கூறியதாவது: கடந்த, 2 ஆண்டாக போதிய மழை இல்லாததால், கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ள ஏரிகள் வறண்டு காணப்பட்டன. இதனால், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டோம். இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளதால், வறண்டிருந்த ஏரிகள் நிரம்பின. இதையடுத்து, அனைத்து விவசாயிகளும் நெல் நடவு செய்துள்ளோம். இந்த நெல் அறுவடைக்கு வரும் காலங்களில், போதிய விலை கிடைப்பதில்லை. எனவே, எருமப்பட்டி யூனியனில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், அரசு நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
31-Dec-2024