உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெடுஞ்சாலைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்

சேந்தமங்கலம்,: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் ஜெயந்தி, முகாமை துவக்கி வைத்தார். முகாமில், கோட்டத்தில் பணியாற்றும் உதவியாளர்கள், சாலைப்பணியாளர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உதவி பொறியாளர் பிரனேஷ், இளநிலை பொறியாளர் சுப்ரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை