உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆசிரியரை விசாரணைக்குஅழைத்து சென்ற போலீசார்

ஆசிரியரை விசாரணைக்குஅழைத்து சென்ற போலீசார்

ஆசிரியரை விசாரணைக்குஅழைத்து சென்ற போலீசார்குமாரபாளையம்,:குமாரபாளையம் அருகே, வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், ஏழு, எட்டாம் வகுப்பு மாணவியரை கை, கால்களை அழுத்தி விடுமாறு கூறுவதாகவும், அப்போது ஆசிரியர், 'பேட் டச்' செய்வதாகவும், பாதிக்கப்பட்ட மாணவியர் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் காலை, பள்ளியை முற்றுகையிட்டனர். குமாரபாளையம் போலீசார், தாசில்தார் சிவக்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவியரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், எஸ்.பி., வழிகாட்டுதல்படி, ஏ.டி.எஸ்.பி., சண்முகம் உத்தரவிட்டதையடுத்து, புகாருக்குள்ளான ஆசிரியரை, போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ