மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் கொள்ளை
10-Feb-2025
சிலவரி செய்திகள்: நாமக்கல்
17-Feb-2025
காய்கறி வியாபாரி பலிமனைவி போலீசில் புகார்குமாரபாளையம்:குமாரபாளையம், வளையக்காரனுார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 59; காய்கறி வியாபாரி. இவரது மனைவி பொன்னியம்மாள். கடந்த, 13 மாலை, வட்டமலை சந்தைக்கு காய்கறி வியாபாரத்துக்கு ஆறுமுகம் சென்றார். மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இவர் வீட்டில் சொல்லாமல் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, சில நாட்கள் கழித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் வீட்டுக்கு வராத கணவர், ஊருக்கு சென்றிருப்பார் என, மனைவி பொன்னியம்மாள் நினைத்துள்ளார். இந்நிலையில், கடந்த, 21ல் பொன்னியம்மாளுக்கு போன் செய்த உறவினர் பாலமுருகன், ஆறுமுகம் இறந்து கிடந்த புகைப்படத்தை காட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த பொன்னியம்மாள், குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரணையில், கடந்த, 14ல் ஆனங்கூர் மதுக்கடை முன் கீழே விழுந்து கிடந்த ஆறுமுகத்தை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின், மேல் சிகிச்சைக்காக ஈரோடு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர், கடந்த, 20ல் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
10-Feb-2025
17-Feb-2025