மேலும் செய்திகள்
சாலையோர பள்ளம் சீரமைப்பு
12-Mar-2025
சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தைசீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கைபள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலையில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிப்பாளையம் பகுதியில் முக்கிய வழித்தடமாக ஆர்.எஸ்., சாலை காணப்படுகிறது. இந்த சாலையின் கீழே பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. கடந்த வாரம் குடிநீர் குழாய் சேதமடைந்து விட்டது. இதையடுத்து பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தவுடன் பள்ளம் மூடப்பட்டது. ஆனால் பள்ளத்தை மேடு, பள்ளமாக சீரமைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பாதுகாப்பு கருதி பேரிகார்ட் வைக்கப்பட்டுள்ளது.இரவில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். கவனக்குறைவாக வந்தால், இந்த சீரமைக்கப்படாத பள்ளத்தால் கீழே விழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளத்தை சீரமைத்து வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12-Mar-2025