மோகனுார், எருமப்பட்டியில் பருவமழையால் பாதிப்பு39 பேருக்கு ரூ.4.07 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை
மோகனுார், எருமப்பட்டியில் பருவமழையால் பாதிப்பு39 பேருக்கு ரூ.4.07 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கைமோகனுார்:மோகனுார், எருமப்பட்டி பகுதியில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், 39 பேருக்கு, 4.07 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், மோகனுார், எருமப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவ மழையால், பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, கலெக்டர் உமா, ஆய்வு மேற்கொண்டார். 2024, டிச.,ல் வடகிழக்கு பருவமழையால், மோகனுார் வட்டாரத்தில், 26 விவசாயிகள், எருமப்பட்டி வட்டாரத்தில், 13 விவசாயிகள் என மொத்தம், 39 பேர், 23.955 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்த நெல், சோளம், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சேதமடைந்தன.அதையடுத்து, பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக, 4 லட்சத்து, 7,235 ரூபாய் வழங்கப்படுகிறது. அதையடுத்து, வேளாண் அலுவலர்களுடன் கள ஆய்வு செய்த கலெக்டர், பாதிப்படைந்த விவசாயிகளின் எண்ணிக்கை, சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு, வேளாண் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை கேட்டறிந்தார்.அதன்படி, எருமப்பட்டி வட்டாரம், கொடிக்கால்புதுார், மோகனுார் வட்டாரம், என்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் பார்வையிட்டார். சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில், தாட்கோ சார்பில், 'மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை, சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும்' என, அலுவலர்களுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டார்.முன்னதாக, மோகனுார் தாலுகா, என்.புதுப்பட்டி கணபதி நகரில், புதிய மின்னணு ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர் வீட்டுக்கு நேரில் சென்ற கலெக்டர், கள ஆய்வு மேற்கொண்டார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், வேளாண் துணை இயக்குனர் கவிதா, தாசில்தார் மதியழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.