கமலாலய குளத்தில் இன்று தெப்ப திருவிழா எம்.பி., ராஜேஸ்குமார் ஆய்வுq
நாமக்கல்: நாமக்கல் நகரின் மத்தியில், பிரசித்த பெற்ற கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில், 100 ஆண்டுகளுக்கு பின், இன்று தெப்பத்தேர் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. இதற்-கான முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் உமா, எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, எம்.பி., ராஜேஸ்குமார் கூறியதாவது:நுாறு ஆண்டுகளுக்கு பின், நாமக்கல்லில் தெப்பத்தேர் திரு-விழா நாளை (இன்று) மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அதில், நாமக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளின் உற்சவ மூர்த்திகள், எழுந்தருளி கமலாலய குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் நிகழ்வு என்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்-தர்கள் நிகழ்ச்சியை காண வருகை தருவர். அவர்களுக்கு தேவை-யான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம், ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, அறங்கா-வலர் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.