வருவாய்த்துறை அலுவலர்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்குமாரபாளையம்:தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் பணியாற்றி, பதவி இறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு, அரசால் வழங்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, குமாரபாளையம் தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் கோரிக்கையை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 21ல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது என, தெரிவித்தனர். ஆர்.ஐ., புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.