உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்சேந்தமங்கலம்:எருமப்பட்டி, சேந்தமங்கலம் யூனியன் பகுதிகளில் இரவு நேரங்களில் அரசு அனுமதியில்லாமல் புறம்போக்கு இடத்தில், கிராவல் மண் வெட்டி எடுக்கப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில், கொல்லிமலை அடிவாரம் போடிநாய்க்கன்பட்டி, கெட்டிமேடு, காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர்.அப்போது, எருமப்பட்டி அருகே, பொட்டிரெட்டிப்பட்டி வழியாக சென்ற டிப்பர் லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, லாரியில் கிராவல் மண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது திடீரென லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினர். இந்த லாரியின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை