உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அம்பேத்கர் பிறந்தநாள் விழாசமத்துவ நாளாக கொண்டாட்டம்

அம்பேத்கர் பிறந்தநாள் விழாசமத்துவ நாளாக கொண்டாட்டம்

அம்பேத்கர் பிறந்தநாள் விழாசமத்துவ நாளாக கொண்டாட்டம்திருச்செங்கோடு:அம்பேத்கரின், 134வது பிறந்த நாள் விழாவை, திருச்செங்கோட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்றார். தொடர்ந்து, அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 1,367 பயனாளிகளுக்கு, 8.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி வழங்கி, கலெக்டர் உமா பேசியதாவது:தமிழக அரசின் திட்டங்களை கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் செயல்படுத்துகின்றன. கல்வி ஒன்றே யாராலும் திருட முடியாத செல்வம், கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்க கூடாது என, காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.புதுமைப்பெண் திட்டத்தில், மாநிலத்திலேயே, 14,000 மாணவியர், தமிழ் புதல்வன் திட்டத்தில், 15,000 மாணவர்களுடன் நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, 4,370 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நாமக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை