வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கைக்கு மனு
நாமக்கல், 'தவறான தகவல்களை வாட்ஸாப் மூலம் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குமாரபாளையம் தாலுகா, ஆனங்கூர் நெட்டவேலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், நெட்டவேலாம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த வாரம் நடந்தது. இதில் வாழை மர தோரணம், இளநீர் குலைகளை அதே பகுதியை சேர்ந்த சிலர் வெட்டி சேதப்படுத்தி, பல்வேறு இடையூறுகளை செய்தனர். கடந்த, 15ல், கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணை பார்த்து ஆபாச சைகை செய்ததுடன், தட்டிக்கேட்டவர்களை தாக்கியுள்ளனர். மேலும், வாட்ஸாப் மூலம், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.