அரசு மகளிர் கல்லுாரியில் 17-வது பட்டமளிப்பு விழா
அரசு மகளிர் கல்லுாரியில் 17-வது பட்டமளிப்பு விழா நாமக்கல்:நாமக்கல், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது.சேலம் பெரியார் பல்கலை கழகத்துடன் இணைவு பெற்ற, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா, முத்தமிழ் விழா, கல்லுாரி ஆண்டு விழா, கல்லுாரி பேரவை நிறைவு விழா நடக்கிறது. அந்த வகையில் நேற்று, 17- வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆங்கில துறை தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கி சிறப்புரையாற்றினார். அதில், பொருளியல் துறையை சார்ந்த கார்த்திகா, முதுகலை பொருளியல் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இளங்கலை பொருளியல் பிரிவில் பவித்ரா மூன்றாமிடம், முதுகலை வரலாற்று பிரிவில் புவனப்பிரியா நான்காவது இடம், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை முதுநிலை பிரிவில் ரவீனா இரண்டாவது இடம், சுவாதி மூன்றாவது இடத்தை பெற்றனர். பட்டமளிப்பு விழாவில், 13 துறைகளை சேர்ந்த முதுநிலை மற்றும் முதுகலை, இளநிலை மற்றும் இளங்கலை மாணவியர் என மொத்தம், 1,091 பேர் பட்டங்களை பெற்றனர்.