உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரம்ஜானை முன்னிட்டு கோ-ஆப் டெக்ஸில்3 நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்

ரம்ஜானை முன்னிட்டு கோ-ஆப் டெக்ஸில்3 நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்

ரம்ஜானை முன்னிட்டு கோ-ஆப் டெக்ஸில்3 நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்நாமக்கல்:நாமக்கல் மாநகராட்சி, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மூன்று நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும், கோ--ஆப்டெக்ஸ் நிறுவனம், 1935-ல் தொடங்கப்பட்டது. இங்கு, காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சேலம் பட்டுப்புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டும், ஆண்டு முடிவு விற்பனைக்காகவும், தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவ ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கோ--ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து மாதந்தோறும், 300 முதல், 3,000 ரூபாய் வரை சேமித்து, இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.கோ--ஆப்டெக்ஸ் மேலாளர் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கோபி, நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் செல்வாம்பாள், முன்னாள் மேலாளர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ