உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மயான சாலையில் சாக்கடை நீர் மலைவாழ் மக்கள் கடும் அவதி

மயான சாலையில் சாக்கடை நீர் மலைவாழ் மக்கள் கடும் அவதி

நாமகிரிப்பேட்டை: முள்ளுக்குறிச்சி அருகே, மயான சாலையில் சாக்கடை நீர் செல்-வதால் மலைவாழ் மக்கள் அவதிப்படுகின்றனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சி அருகே மலையா-ளப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாத்தியப்பட்ட மயானம், முள்ளுக்குறிச்சி பிரதான சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. இந்த சாலையில், முள்ளுக்குறிச்சி பகுதியில் இருந்து வரும் சாக்கடை நீர் செல்கி-றது. இதனால், மயானத்திற்கு செல்பவர்கள் சாக்கடையில் நடந்-துதான் செல்ல வேண்டியுள்ளது. நேற்று மலையாளப்பட்டியை சேர்ந்த சின்னமுத்து மனைவி சின்-னக்காளி, 75, என்பவர் இறந்துவிட்டார். இவரது சடலத்தை வண்-டியில் வைத்து உறவினர்கள் தள்ளி சென்றனர். சாக்கடை நீர் மற்றும் இரண்டு நாட்களாக பெய்த மழையால் சாலை முழு-வதும் தேங்கி நின்றது. இதனால், சடலத்தை எடுத்து செல்ல முடி-யாமல் உறவினர்கள் தவித்தனர். பெரிய சிரமத்திற்கு நடுவே சட-லத்தை மயானத்திற்கு கொண்டு சென்றனர். எனவே, மலைவாழ் மக்களின் மயானத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !