உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாதயாத்திரை பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கல்

பாதயாத்திரை பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கல்

பாதயாத்திரை பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கல்வெண்ணந்துார்:வெண்ணந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், தைப்பூசத்தை முன்னிட்டு காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு பாதயாத்திரை, காவடி எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு பாதயாத்திரை, காவடி எடுத்து செல்லும் பக்தர்களுக்கு, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, சித்தர் கோவில் பகுதி, அத்தனுார் மேட் மிஷின், எட்டி மரம் பஸ் ஸ்டாப், வெள்ள பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் பகுதி, வெண்ணந்துார் பஸ் ஸ்டாப் பகுதி, மின்னக்கல் பிரிவு சாலை, நாச்சிப்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில், தற்காலிக பந்தல் அமைத்து நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !