உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மனு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மனு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மனு நாமக்கல்:சேந்தமங்கலத்தில் ஏப்., 12ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, நாமக்கல் கலெக்டர் உமாவிடம், விழா குழுவினர் மனு அளித்தனர்.அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழா, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதேபோல், நடப்பாண்டிலும் ஜல்லிக்கட்டு நடத்த விழா சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு, ஏப்., 12ல் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றியும், அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியும் ஜல்லிக்கட்டு விழா நடத்துவோம் என, ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் உறுதி அளிக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை