உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் மோட்டார் திருட்டுபோலீசார் விசாரணை

மின் மோட்டார் திருட்டுபோலீசார் விசாரணை

மின் மோட்டார் திருட்டுபோலீசார் விசாரணைஎலச்சிபாளையம்:கருமகவுண்டம்பாளையம் கிராமத்தில், மின்மோட்டார் திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.எலச்சிபாளையம் அருகே, கருமகவுண்டம்பாளையம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சங்கர், 42; இவரது வீட்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு, 2:00 மணியளவில், தண்ணீர் எடுத்து விடும் கம்பரசரில் இருந்த மின்மோட்டாரை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து, சங்கர் அளித்த புகார்படி எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதேபோல், கடந்த 1ம்தேதி அவரது வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் இருந்த பேட்டரி திருட்டு போனது. ஒரே வீட்டில் இரண்டு முறை திருட்டு போனது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி