உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்பள்ளிப்பாளையம்:தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நாமக்கல் மின் பகிர்மான வட்டம் பள்ளிப்பாளையம் கோட்டம் சார்பில், பள்ளிப்பாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நேற்று காலை, 11:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம், பள்ளிப்பாளையம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தலைமையில் நடந்தது.முகாமில், பொதுமக்கள் மின் கட்டணம் சம்பந்தமான குறைகள் குறித்து, 15 மனுக்களும், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றியமைக்க, 10 மனுக்களும், குறைந்த மின்னழுத்தம் சரிசெய்ய, 14 மனுக்களும் மற்றும் இதர புகார்கள் குறித்து, 35 மனுக்களும் என, மொத்தம், 74 மனுக்கள் பெறப்பட்டன. அதில் ஒரு புகார் மனு உடனடியாக சரி செய்யப்பட்டது. செயற்பொறியாளர் பரிமளா, துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் மாரியப்பன், பள்ளிப்பாளையம் கோட்ட உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.* ப.வேலுார் மின் பகிர்மான கழகம் சார்பில், நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம், ப.வேலுார் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. செயற்பொறியாளர் வரதராஜன் தலைமை வகித்தார். முகாமில், பழுதடைந்த மின் அளவைகள் குறித்த புகார்கள், பழுதடைந்த மின் கம்பங்கள் குறித்த புகார்கள், குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்கள் விசாரித்து தீர்வு காணப்பட்டன. உதவி செயற்பொறியாளர் ராஜா, சண்முகசுந்தரம், மாலதி, சரவணன், ஜெகதீசன் மற்றும் கோட்டத்தில் உள்ள அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ