ஜி.ஹெச்.,க்கு கூடுதல் கட்டடம்கட்ட ரூ.3.50 கோடி ஒதுக்கீடு
ஜி.ஹெச்.,க்கு கூடுதல் கட்டடம்கட்ட ரூ.3.50 கோடி ஒதுக்கீடுபள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம், ஆவாரங்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இதே வளாகத்தில் சித்தா பிரிவும் செயல்படுகிறது. பள்ளிப்பாளையம், ஆவத்திபாளையம், அலமேடு, பெரியார் நகர், வசந்த நகர், காவிரி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், உள்நோயாளிகளாக பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதுமான கட்டட வசதி இல்லாததால், மருத்துவர்களும், சிகிச்சைக்கு வருவோரும் அவதிப்பட்டுவந்தனர். தற்போது, இந்த மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட, 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.